இந்திர கோபம் - தொழில் வசியம் - ஜன வசியம் – Inthira kobam Vsiyam

Author: மாந்திரீக ஆசான் / Labels:

இந்திர கோபம் - தொழில் வசியம் - ஜன வசியம் – Inthira kobam Vsiyam

தெய்வீக மாந்திரீக முறைகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உயிர் ஜீவ வித்துக்களும் சேர்ப்பதுண்டு. அவைகளில் ஒன்றுதான் இந்திர கோபம்  என்னும்  அதிசய பூச்சி இனமாகும்.

பல்வேறு வசிய முறைகள், நீடித்த கலவியல் உறவு, மற்றும் மாயா ஜாலம் செய்வதற்கு பயன்படும் முக்கியமான மூலப் பொருள்களில் ஒன்றுதான் இந்திர கோபம் ஆகும்.இதன் பெயருக்கு ஒரு பொருள் அர்த்தம் உண்டு. அதாவது நாம் செய்யும் வசியம் மற்றும் அதிசய செயல்களுக்கு இந்த பூச்சியைத்  தொட்டால்  இந்திரனுக்கு கோபம் வருமாம். 

அதாவது இதனைக்  கொண்டு அனைவரும் வல்லவர்கள் ஆகி விடுவார்கள் என்று.  அதனால்தான் இந்திர கோபம் என்று சித்தர்கள் பெயரிட்டனர். 

மழை காலங்களில் செம்மண் பூமிகளில் பகல் வேளைகளில் இதனை காணலாம்.அழகான சிவந்த நிறத்தில் வெல்வெட் பட்டு துணி போன்று இதன் மேலே இருக்கும்.

வசிய மை - தொழில் வசிய மை செய்முறை விபரம் 

1 - வெள்ளெருக்கன் வேர் 
2 - வெள்ளை காக்கணம் வேர் 
3 - வெள்ளை விஷ்ணு கிராந்தி வேர் 
4 - இந்திர கோபம் - 21
5 - கோரோஜனை - 1-கிராம் [ ஒரிஜினல் ]
6 - புனுகு - 1-கிராம் [ ஒரிஜினல் ]
7 - குங்குமப்பூ - 1-கிராம் [ ஒரிஜினல் ]
8 - பச்சை கற்பூரம் - 5 கிராம்  
9 - ஏரழிஞ்சி குழித்தைலம் 

வளர்பிறையில் ஞாயிற்றுகிழமை அன்று மேற்கண்ட மூன்று மூலிகை வேர்களை சாப நிவர்த்தி விதிகளின் படி பறித்து வந்து சிறு துண்டுகளாக நறுக்கி முன்பே சேகரித்து வைத்த இந்திர கோபம் சேர்த்து  புது மண் பானையில் போட்டு வறுத்து கருக்கி இதனுடன் ஏரழிஞ்சி குழித்தைலம் விட்டு 5 - மணி நேரம் அரைத்து அதனுடன் 5,6,7,8, ல் உள்ள பொருட்களை யும் சேர்த்து ஒரு ஜாமம் - 2 1/2 -மணி நேரம் அரைக்கவும்.இதனை ஒரு செம்பு டப்பியில் பதனம் செய்யவும்.

இதனை ஒரு வாழை இலையில் வைத்து அவல்,பொறி, கடலை, பழம், பாக்கு வைத்து தூப,தீபம் காண்பித்து தினமும் வசிய மூல மந்திரம்  1008 - உரு செபிக்கவும்.

இதற்கு வசிய மூல மந்திரம் :

ஓம் நமோ பகவதே மனோ மயே ஹ்ரீம், க்லீம், சகல ஸ்தாவர ஜங்கமம் மம வசம் ஆகர்ஸய, ஆகர்ஸய ஹ்ரீம் ஸ்வாஹ.

இந்த மந்திரத்தை தினமும் 1008 - உரு வீதம் 21 - நாட்கள் ஜெபம் செய்து வர வசிய மை உயிர் பெரும்.

இதை கொஞ்சம் எடுத்து நெற்றியில் திலகமிட்டு சென்றால் எல்லா வித தொழில், வியாபாரம் பெருகும். வசியம் ஆகும். நம்மைக் காண்பவர்  மதிப்பும், மரியாதையும் தருவர். இதனை இட்டுச் செல்பவர் யாராயினும் மக்களின் மதிப்பை பெற்று பெரு வாழ்வு வாழ்வது உறுதி.

  


நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786

கணவனை பிரிந்து வாழும் பெண் கணவனுடன் சேர்ந்து வாழ - ஓலைச்சுவடி முறை – Olaichuvadi Kanavan Vasiyam

Author: மாந்திரீக ஆசான் / Labels:

கணவனை பிரிந்து வாழும் பெண் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ - ஓலைச்சுவடி முறை – Olaichuvadi Kanavan Vasiyamஇந்த ஓலைச் சுவடி எனது பாட்டனாரின் அனுபவ முறை ஏட்டுச் சுவடிகளில் ஒன்றாகும்.இதில் உள்ள முறை தாந்திரீக வழிபாட்டு முறையை சார்ந்த தாகும்.

பொதுவாக மாந்திரீகம் என்பது மந்திரம், தந்திரம், எந்திரம், என்னும் மூன்று வகை சூத்திரங்களைக் கொண்டதாகும்.

தாந்திரீக வழிபாடு என்பது முத்திரைகள், பாவனைகள், மற்றும் சூட்சும அட்சரங்களைக் கொண்டு பஞ்சபூத சக்திகள்,மற்றும் இறைஅருள் ஆற்றலை யும் பெற்று   நாம் கோரிய காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகும்.

இந்த சுவடியில் வேறுபாடு வடிவங்களுடன் சூட்சும அட்சரங்கள் ஆ முதல் ஷ என்ற எழுத்து வரை 31 - எழுத்துக்கள் உள்ளன. இதனை வளர்பிறையில் ஞாயிற்றுக்கிழமை குரு ஓரையில் கிழக்கு நோக்கி அமர்ந்து எந்திர விதி களின் படி ஒரு செப்புத் தகட்டில் எழுதி பிரிந்து வாழும் பெண்ணை அவள் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமென மானசீகமாக சங்கல்பம் செய்து கொடுக்க விரைவில் கணவனுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழ்வாள்.

வாழாமல் திரிகிற பெண்ணுக்கு எனத் தொடங்குகின்றது இந்தப்படி எழுதிக் கட்ட வாழ்வாள் [ கணவனுடன் சேர்ந்து வாழ்வாள் ] என முடிகின்றது.நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786

ஆண், பெண் வசியம் - மூலிகை வசியம் - Aan, Pen Vasiyam

Author: மாந்திரீக ஆசான் / Labels: , ,

ஆண்பெண் வசியம் - மூலிகை வசியம் -  Aan,  Pen  Vasiyam


ஆண், பெண் வசியம் - மூலிகை வசியம் -  Aan,  Pen  Vasiyam

இன்று வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஆண், பெண் இருவரிடமும் உண்மையாய் காதலிக்கும் போதும், அல்லது கணவன் மனைவியாய் வாழ்ந்து வருபவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி பிரிந்து விடுதல் என்பது சர்வ சாதாரணமாய் நிகழ்ந்து வருகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் அற்புத மாந்திரீக மூலிகைப் பிரயோகம் ஒன்று நம் தமிழகத்தில் அனுபவ முறை மாந்திரீக உபாசகர்களிடம் பல நூறாண்டு காலமாய் இருந்து வருகின்றது.

ஆண், பெண் இருவரிடம் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் தோன்றும் போது உடனடியாய் இம் மாந்திரீக மூலிகைப் பிரயோகம் செய்து விட இருவரையும் பிரிந்து விடாமல் தடுத்து ஒற்றுமையாய் சந்தோசமாய் வாழ வகை செய்யும்.

இதில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் வசியம் செய்யும் இரண்டு வகை உண்டு.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பேய் மிரட்டி என்னும் மூலிகையை விநாயகரை நினைத்து வணங்கி 9 - இலையை பறித்து வந்து இதனுடன் வெள்ளை பூண்டு 3 -பல் எடுத்து சேர்த்து அரைத்து கையில் வைத்து பிழிய சாறு வரும். இதனை ஆண் பெண்ணின் உச்சந்தலையில் வைத்து தேய்த்து விட பெண் ஆணிடம் வசியமாகி என்றும் அவனை விட்டு என்றும் பிரிய மாட்டாள். 

இதனையே பெண் ஆணின் தலையில் தேய்த்து விட ஆண் அவளிடம் வசியமாகி என்றும் பிரியமான மனதுடன்  வாழ்வான். 

சூட்சும இரகசியம் : இம் மூலிகையில் ஆண், பெண் என்ற இரண்டு வகை உண்டு.எனவே பெண்ணை வசியம் செய்ய ஆண் வகையையும், ஆண் வசியம் செய்ய பெண் மூலிகை வகையை பயன்படுத்த வேண்டும்.


நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786
பதிவுகள் தலைப்பு

Translate

Powered by Blogger.

இமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV