நாயுருவி மூலிகை - சர்வ வசியம் - Nayuruvi vasiyam

Author: மாந்திரீக ஆசான் / Labels:

நாயுருவி மூலிகை - சர்வ வசியம்



நாயுருவி மூலிகை - சர்வ வசியம்


சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ மூலிகைகளில் ஒன்றுதான் நாயுருவி ஆகும். இம்மூலிகை மருத்துவம் மற்றும் மாந்திரீகம் இரண்டிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது ஆகும்.இதில் நாயுருவி, செந்நாயுருவி என இரண்டு வகை உண்டு.


நாயுருவி முக வசியம்

எங்கும் சுலபமாக கிடைக்கும் நாயுருவி மூலிகை வேரினை வளர்பிறையில் பறித்து தினமும் பல் துலக்கி வர முக வசியம், ஜன வசியம், உண்டாகும். இம் முறையை 40 நாட்கள் மட்டும் தொடர்ந்து செய்து பின்பு நிறுத்தி விடவும்.நாயுருவி வேரினால் பல் துலக்கி வரும் போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் எனவே தினமும் பசும் பால் உண்டு வரவும்.  


யோகம் தவம் செய்ய பசி தம்பனம் செய்யும் நாயுருவி

நாயுருவி விதை ஒரு கைபிடி அளவு பறித்து பசும் பால் விட்டு அரைத்து 200 மிலி பசும் பாலில் கலந்து குடித்து விட பசி எடுக்காது.இம்முறையில் தான் சித்தர்கள், முனிவர்கள் பசியை தம்பனம் செய்து சமாதி நிலை யோகம் செய்வர்.பின்பு தேவைப்படும் போது பசியை தூண்டும் மூலிகை சூரணங்களை உண்டால் பசி எடுக்கும்.


செந்நாயுருவி சர்வ வசியம்

செந்நாயுருவியை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று மூலிகை சாபநிவர்த்தி விதிகளின் முறைப்படி காப்பு கட்டி விட்டு அடுத்த வெள்ளிகிழமை அன்று உயிர் கொடுத்து ஓம் சவ்வும் ஐயும் என்று 128 - உரு செபித்து வேர் பறித்து குளிசம் செய்து உடலில் அணிய ஆண் வசியம், பெண் வசியம், ஜன வசியம், தன வசியம், சர்வ வசியம் ஆகும்.




நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786


ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu

Author: மாந்திரீக ஆசான் / Labels:

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu


ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu


கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில்கருடன் கிழங்குகொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு.இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு"என்ற பெயர் தான் முன்பு அனைவருக் கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.


இம் மூலிகை காடுகள்,வனங்களில்,மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சை யாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50  வருடங்களுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடுநகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.


நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?


பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்.அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும்,ஓடி விடும்.


இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். 


உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது."சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு.ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது .இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும். 


இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு.அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி,தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி,சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர் கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள் :-

இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல் வேண்டும்.இது அதிக கசப்பு சுவை கொண்டது.

சிறப்பாக பாம்பு விஷங்கள்,தேள்,பூரான் விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு  இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்,மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும். 


குறிப்பு : மூலிகை சாபநிவர்த்தி, மற்றும் உயிர் நிலை நிறுத்தி எடுக்கும் விதிகளின்படி  எடுக்கப் பட்ட ஆகாச கருடன் கிழங்கு எம்மிடம் கிடைக்கும்.


நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786


இரசமணி - இரசலிங்கம் விளக்கம் - Rasamani – Rasalingam

Author: மாந்திரீக ஆசான் / Labels:

இரசமணி - இரசலிங்கம் விளக்கம் - Rasamani –Rasalingam


இரசமணி - இரசலிங்கம் விளக்கம் - Rasamani –Rasalingam


இரசமணி என்பது திரவ நிலையில் உள்ள பாதரசத்தை (Mercury) மூலிகைகள்,உப்பு வகைகள்,பாஷாணங்கள் ஆகிய வைகளைக் கொண்டு திட ரூபமாகக் கட்டி புடமிட்டு சாரணைகள் ஏற்றி மணியாக்கி மந்திர உருவேற்றி தெய்வீக சக்தி மிக்கதாக மாற்றுவதே இரசமணி ஆகும்.

சித்தர் தத்துவத்தில் பாதரசம் சிவ விந்து என குறிப்பிடப்படுகின்றது.இதில் உஷ்ணமும்,குளிர்ச்சியும் சமமாக உள்ளது. சூடான பொருளோடு சேர்ந்தால் சூட்டின் குணத்தையும்,குளிர்ச்சியான பொருளோடு சேர்த்தால் குளிர்ச்சியையும் தரும் வேறு எந்தப் பொருளுக்கும் இந்த அரிய குணம் இல்லை.மேலும் பஞ்சபூத சக்தியின் ஐந்து குணங்களையும் கொண்ட ஒரே பொருள் பாதரசம் மட்டும் தான்.  

எனவேதான் சித்தர்கள் பாதரசம் ஒன்றை மூலப்பொருளாக வைத்து தெய்வீக மெய்ஞானம்,இரசவாதம்,அஷ்டமா சித்து போன்றவைகளை எளிதில் சித்தி அடைந்துள்ளனர். இரசமணியில்  ஒன்பது வகையான மணிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அதிசய ஆற்றல்கள் கொண்டது.

உண்மையான இரசமணி என்பது  நவபாஷாணங்களில் ஒன்றான ஜாதிலிங்கம் என்ற பாஷாணத்திலிருந்து பதங்கம் என்ற முறையில் எரித்து சூதம் என்ற பாதரசத்தை பிரித்து எடுப்பதே "வாலைரசம்" எனப்படும். இதிலிருந்து சுத்தி முறையில் ஏழு வித தோஷங்களை பிரித்து எடுத்து பின்பு இரசமணியாகக் கட்டினால் தெய்வீக இரசமணி ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் இப்படி முறைப்படி இரசமணி செய்து முடிக்க நாட்கள் பல ஆவதுடன் பணமும் ஏராளமாக  ஆகின்றது,ஆனால் பலன்களை முழுமை யாகக் காணலாம்.


கருவூரார் சித்தரின் பாடல் :
"இருந்துபார் சூதத்தை எவ்வண்ணத் தாலும் 
இடுக்கினவன் தேவனடா ஆனால் இடுக்கமில்லை"


சூதம் என்ற பாதரசத்தை தெய்வீக சக்தி மிக்க இரசமணியாகக் கட்டுவதற்கு சித்தர்களின் அனுக்கிரகமும்,குருவின் ஆசி பெற்றவர்களால் மட்டுமே கட்ட முடியும். இவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.    


இரசமணி பற்றி தேரையர் சித்தர் பாடல் :-
அந்த மாக்கும் அரசும் அளித்திடும் 
சுத்த மாக்கும் சுகத்தை மிகத்தரும்
புத்த மந்திர பூத பிசாசு பேய் 
இத்த னைக்கும் இயம னிதாமே                   


முறைப்படி கட்டிய இரசமணியை அணிவதாலும் ,பூஜிப்பதாலும் ஜன வசியம், பெரிய பதவி,இரத்த விருத்தி சுத்தி, உண்டாகும் தாது குறைவு, நரம்புத்தளர்ச்சி இவை நீங்கி உடல் வலுப்பெறும்.

சகல மந்திர ஏவல்,பூதம்,பேய்,பிசாசு இவைகளால் ஏற்ப்படும் வினைகளுக்கு இது யமன் போன்றது.மேலும் இந்த இரசமணி சகல அஷ்ட ஐஸ்வர்யங் களையும் கொடுக்கும்.


தெய்வீக இரசமணியை அணிவதாலும் ,பூஜித்து வருவதாலும் உண்டாகும் நன்மைகள் :

1 - இதனை அணிவதால் ஜனவசியம் ,தொழில் வசியம் உண்டாகும்.

2-இரசமணியை முன்பக்கமாக அணிந்து செல்ல சகல காரிய வெற்றி உண்டாகும்.

3 - உடலில் துர்நீரைப் போக்கி இரத்தத்தை சுத்தி செய்யும்.

4 - மறதியை நீக்கி மூளைக்கு ஞாபக சக்தியை பெருக்கும்.

5 - மனதை ஒரு நிலையில் நிறுத்தி ஞானத்தை விருத்தி செய்யும்.

6 -எதிரிகளால் ஏவப்படும் பில்லி ,சூனியம்,ஏவல்,வைப்பு இவைகள் உங்களை  அணுகாமல் எதிர்த்து காக்கும்.

7 -அறம் ,பொருள் ,இன்பம்,என்ற மூன்று வகை பேரினையும் தர வல்லது.

8 -இயற்கை சக்திகளான இடி,மின்னல்,மற்றும் வாகன விபத்துக்கள் போன்ற வைகளிலிருந்து பாதுகாக்கும்.

9 -உடலில் அணிவதால் நரம்புகள் வலுப்பெற்று மூப்பை விளக்கி ஆயுளை பெருக செய்யும்.

10 -நவக்கிரகங்களின் தீய தோஷங்களைப் போக்கி நல்ல பலன்களை கிடைக்கச்செய்யும்.

11 -ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு தசாவோ,புத்தியோ பலன் அளிக்காது என்று இருந்தாலும் இந்த மணியை அணிந்து வருவதால் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பது உறுதி.

12 -இரசமணியை அணிந்து வருவதாலும் பூஜித்து வருவதாலும் நினைத்த காரியம் நிறைவேறும்,சுப காரியங்கள் தடையின்றி நடக்கும்,கோர்ட் வழக்குகளில்  வெற்றி கிட்டும்,கல்வி மேன்மை பெரும்,புத்திர பாக்கியம் கிட்டும்வேலை வாய்ப்பு கிட்டும்,வெளிநாடு பயண யோகம் கிட்டும்,மேல் நிலை அதிகாரிகளிடம் மதிப்பும் மரியாதையும் கிட்டும்.

13 -இரசமணி அல்லது இரசவிநாயகர் உருவில்,இரசலிங்க உருவில்,வைத்து வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களில் முறைப்படி பூஜித்து வர கண் திருஷ்டி, ஓமலிப்பு, ஏவல்,பில்லி,சூன்யம்,முதலிய தோஷங்கள் விலகிவிடும்.அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.குடும்பம் விருத்தியாகும்,தொழிலில் வியாபாரம் பெருகி அதிக லாபம் கிட்டும்.

14 -தெய்வீக மூலிகை ரட்சை ,மந்திர எந்திரங்கள் இவைகளை விட தெய்வீக ஆற்றலை முழுமையாகக் கிரகித்து கொடுக்கும் ஆற்றல் இரசமணி மற்றும் இரசலிங்கம் இவைகளுக்கு உண்டு.

[ தெய்வீக இரசமணி , இரசலிங்கம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். ]


நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786



எதிரிகளை வெல்ல, வறுமை நீங்கி செல்வ வளம் பெருக மூலிகை இரட்சை

Author: மாந்திரீக ஆசான் / Labels: ,

எதிரிகளை வெல்ல, வறுமை நீங்கி செல்வ வளம் பெருக மூலிகை இரட்சை


எதிரிகளை வெல்ல, வறுமை நீங்கி செல்வ வளம் பெருக மூலிகை இரட்சை 

நீர் நிறைந்த ஆறு,குளம் உள்ள கரைகளில் காணப்படும்  ஒரு அபூர்வ சக்தி கொண்ட மூலிகைதான் நீர்மேல் நெருப்பு ஆகும். சூரியஒளி படும்  பகல் நேரங்களில் இம் மூலிகை நெருப்பு போல் காணப்படும்.அதனால்தான் இம்மூலிகைக்கு நீர் மேல் நெருப்பு என்னும் பெயர் ஏற்பட்டது.


மேலும் இம்மூலிகையை காயவைத்து இடித்து தூள் செய்து ஒரு துணியில் வைத்து திரி போல் சுருட்டி எண்ணை ஊற்றி விளக் கேற்றி வைக்க புயல் அடித்தாலும் அணையாது. 


நீர்மேல் நெருப்பு என்னும் இம் மூலிகைக்கு திங்கள் கிழமை அன்று கன்னிநூல் காப்பு கட்டி தினை மாவும்,தேனும் வைத்து, சாபநிவர்த்தி செய்து, உயிர் கொடுத்து "அக்கினி ரூபி அக்கினி யுச்சாரி சர்வ கிரகவாணி சர்வேசுவரி சுவாதி நாமா"என 128, முறை செபித்து சிவப்பு சேவலை பலி கொடுத்து இரத்தம் அம் மூலிகை மேல் சிறிது விட்டு மூலிகையின் ஆணி வேர் அறாமல் பறித்து ஒரு வெள்ளி தாயத்தினுள் போட்டு அணிந்து கொள்ள எதிரிகள் அடங்கி விடுவர்.வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.கர்ம வினையால் ஏற்பட்ட நாள்பட்ட நோய்கள் விரைவில் நீங்கும். 




நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786







கணவன் மனைவி சேர்ந்து வாழ - ஆண்,பெண் மூலிகை வசிய மருந்து

Author: மாந்திரீக ஆசான் / Labels: ,

கணவன் மனைவி சேர்ந்து வாழ - ஆண்,பெண் மூலிகை வசிய மருந்து 


கணவன் மனைவி சேர்ந்து வாழ - ஆண்,பெண் மூலிகை வசிய மருந்து 

இன்றைய நாகரீக உலகில் கணவன்,மனைவியாக வாழ்ந்து வருபவர்களில் ஒற்றுமையாய் வாழ்தல் என்ற நிலை மாறி பிரிந்து வாழும் சூழ்நிலையின் சதவிகிதம் அதிகரித்து வருகின்றது.இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

·       சிறிய காரணங்களுக்கும் அதிகம் கோபப்படுதல்
·       கூட்டுக்குடும்பமாக வாழாமல் தனித்து வாழ்தல்,
·       வேலை செய்யும் அலுவலகங்களில் வேலைப் பளு,
·       தாம்பத்ய உறவில் திருப்தி இல்லாமை
·       பிறரிடம் ஏற்படும்  தவறான தொடர்பு,
·       ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகாத மனநிலை,
·       தான் பணம் சம்பாதிக்கின்றேன் என்ற [ஈகோ] சுய கவுரவம்   

போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.இப்படி வேறுபட்ட மன நிலையிலும், கருத்து வேறுபாடுகளுடன் வாழ்ந்து வரும் கணவன், மனைவி இருவரையும் ஒற்றுமையாய் வாழவைக்க தெய்வீக மாந்திரீக முறையில் ஏராளமான வழிமுறைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் மூலிகை வசிய மருந்து ஆகும்.வசிய மூலிகைகள் ஏராளமாக உள்ளது.அதில் சுலபமான ஒரு வசிய மூலிகை மருந்து தான் கரந்தை வசிய ஈடு மருந்து ஆகும்.


ஆண்,பெண் வசிய மருந்து செய்முறை விளக்கம்:

கொட்டை கரந்தை  என்னும் மூலிகையின் இலைகளை ஞாயிற்றுக் கிழமை காலையில் சூரிய உதயத்தின் போது மூலிகை சாப நிவர்த்தி விதிகளின்படி பறித்து வந்து இடித்து சாறு எடுத்து இந்த சாறுடன் தனது மார்பு அழுக்கு சிறிது சேர்த்து இனிப்பான தின்பண்டம்,அல்லது பழச்சாறு [ஜூஸ்] இவைகளில் கலந்து நாம் விரும்பும் பெண்ணுக்கு கொடுத்தால் அந்த பெண் வசியமாவாள்.அதே போல் பெண் தான் விரும்பும் ஆணுக்கு கொடுக்க ஆண் வசியமாவான்.

இந்த மூலிகை வசிய மருந்து மூலம் கணவன்,மனைவி சேர்ந்து வாழவும், தவறான நடத்தை உள்ளவரை விடுவிக்கவும்இந்த மூலிகை வசியம் பெரிதும் பயன்படும்.



நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர்  குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா 

manthrigaragasiyam@gmail.com 
cell : 9095590855  - 9655688786


பதிவுகள் தலைப்பு

Translate

Powered by Blogger.

இமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV