சர்வ ஜன வசிய மை செய்முறை இரகசியம்
வெள்ளெருக்கு முலிகை வேருக்கு ஞாயிற்றுகிழமை மாலை
6 to 6.30 அளவில் தாமரை நுலால் காப்பு
கட்டி வெற்றிலை பாக்கு தேங்காய், வாழைப்பழம்,கற்பூரம்,சாம்பிராணி, (தீபம்
தூபம் ) காண்பித்து விட்டு கணபதி மூல மந்திரம் 108, முறை ஜெபிக்கவும்.
கணபதி மூல மந்திரம்
ஓம் கங் சிங் குங் கணபதி லோக வசீகரம் பகவதே
108, முறை ஜெபித்து விட்டு மஞ்சள் நீர்
கொண்டு முலிகை மேல் தெளித்து விட்டு வந்து விட வேண்டும்.
பின்பு மீண்டும் செவ்வாய் கிழமை இரவில் சென்று
இதே மந்திரத்தை 108, முறை செபித்து வெள்ளருக்கு மூலிகை வேரை கற்பூரம், சாம்பிராணி,(தீபம் தூபம்) காண்பித்து பறித்து வரவும்.
இதன் வேரை மட்டும் வெட்டி எடுத்து சிறு சிறு
துண்டுகளாக நறுக்கி ஒரு புது மண் ஓட்டில் போட்டுஅடுப்பில் வைத்து எரித்து
கருக்கவும். இதனுடன் கோரோஜனை,குங்குமப்பூ,கஸ்தூரி, புனுகு,பச்சை கற்பூரம் இந்த
ஐந்து சரக்குகளும் சிறிது சேர்த்து அம்மியில் விட்டு அரைக்கவும். பிறகு இந்த வசிய
மையை ஒரு செம்பு,அல்லது வெள்ளி டப்பியில் எடுத்து வைக்கவும்.
பிறகு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காலையில்
பூஜை அறையில் ஒரு வாழை இலையில் வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம்,அவல்,பொரி,கடலை வைத்து
அதன் நடுவில் வசிய மை டப்பியை வைத்து கற்பூரம்,சாம்பிராணி,(தீபம் தூபம் )
காண்பித்து விட்டு மல்லிகைப் பூவினால் கணபதி வசிய மூல மந்திரம் ஒவ்வொன்றாக கூறி
வசிய மை டப்பியின் மேல் போடவும். வசிய மந்திரம் 1008, முறை ஜெபித்து முடிக்க வசிய
மைக்கு உயிர் வரும். இதுவே சர்வ ஜன வசிய மை ஆகும்.
கணபதி வசிய மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்,கிலவும் கம்
கணபதயே வர வரத சர்வ ஜனமே என் வசமானாய ஸ்வாக
1008, முறை ஜெபிக்கவும்.
பின்பு தினமும் காலையில் குளித்து விட்டு
வெளியில் செல்லும் போது சர்வ ஜன வசிய மையை
சிறிது எடுத்து நெற்றியில், அல்லது தலை உச்சியில் வைத்து செல்ல சகலரும்
வசியமாவர்கள்.
நன்றி
இறையருள்,மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்
சிறுமலை புதூர், திண்டுக்கல் –
தமிழ்நாடு – இந்தியா
செல் : 9095590855 - 9655688786